அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி  நேற்று (21) மற்றுமொரு கூட்டத்தை நடத்தியிருந்தது.

தெங்கு அபிவிருத்தி சபையின் நிதி நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்காக அந்த அதிகார சபையின் அதிகாரிகளைக் கோப் குழு அழைத்திருந்தது. 

இந்தக் கூட்டத்தில் பிராந்திய அலுவலகங்களிலிருந்த அதிகாரிகள் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்துகொண்டனர். 

கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் இந்திக அநுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, இரான் விக்ரமரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் பிரேம்நாத் தொலவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.