வல்சபுகல - சூரியவெவ பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட  இரு விவசாயிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யானை - முன்மொழியப்பட்டுள்ள காட்டு யானை முகாமைத்துவ வனப்பகுதியை உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்குமாறும், யானை – மனித முரண்பாட்டுககு உரிய தீர்வைப் பெற்றுகொடுக்குமாறும் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த 18 ஆம் திகதி, வல்சபுகல பகுதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஏழு விவசாயிகள் இணைந்து நேற்று முன்தினம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.