'காஞ்சனா' படத்தின் மூன்று பாகங்களை தொடர்ந்து இயக்கி ரசிகர்களிடத்திலும், திரை உலகிலும் வெற்றி பெற்ற நாயகனாகவும், இயக்குனராகவும் வலம் வரும் ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகவிருக்கும் 'ருத்ரன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகிர்தண்டா' போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் எஸ் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்த படத்தின் கதை, திரைக்கதையை கே பி திருமாறன் எழுத, ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

கொமர்ஷல் ஜேனரில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர் டி ராஜசேகர் கவனிக்கிறார். இந்தப்படத்தில் கதையின் நாயகனாக ராகவா லோரன்ஸ் நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் நாசர் மற்றும் நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர தொண்டனாக அறியப்படும் ராகவா லோரன்ஸ் நடிப்பின் நடிப்பில் உருவாகவிருக்கும் 'ருத்ரன்' படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.