இலங்கையில் அவசர தேவைக்காக ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதியை வழங்கியுள்ளது.

இதனை ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் ,

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. 

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பு மருந்தை இலங்கையில் அவசர பாவனைக்கு பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.

எனவே எதிர்வரும் நாட்களில் இலங்கையில் பாவனைக்காக குறித்த தடுப்பு மருந்தை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொவிட்-19 தொற்றுக்காக இலங்கையில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என்றார்.