கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு - 1, 2, 3, 7, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணிமுதல் மறுநாள் காலை 9.00 மணிவரையான 24 மணிநேரப் பகுதியிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.