புற்று நோயாளிகளை,  சாதாரண புற்றுநோயாளிகள் என்றும், பரவக்கூடிய புற்றுநோயாளிகள் என்றும் இருவகையாக வகைப்படுத்தலாம்.

உடலில் உள்ள உறுப்புகளில் ஏதேனும் ஓரிடத்தில் தோன்றி, அவை உடல் முழுவதும் பல பாகங்களில் பரவினால் அதனை மருத்துவர்கள் பரவக்கூடிய புற்றுநோய் ( Metastatic Cancer ) குறிப்பிடுகிறார்கள்.

இதனை குணப்படுத்த Systematic Therapy, Local Therapy மற்றும் Palliative Care போன்ற சிகிச்சைகளை பயன்படுத்துகிறார்கள்.

எம்முடைய உடலில் தொண்டை, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், கணையம், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, ப்ராஸ்டேட், மார்பகம், கருப்பை வாய் என பல்வேறு இடங்களில் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.

புற்றுநோயை உருவாக்கும் கட்டிகள் எவ்விடத்தில் இருக்கிறதோ அந்த பாகத்தை குறிப்பிட்டு புற்று நோய் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக் காட்டுவர்.

இந்நிலையில் புற்றுநோய் கட்டிகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு பரவக்கூடிய தன்மை கொண்டது. இதன்போது புற்றுநோய் கட்டிகள் வேறு பகுதிக்கு பரவும் முன் ரத்தம் பாயும் நுண் குழாய்கள் மற்றும் நிணநீர் பாதையில் ரத்த உறைதலை ஏற்படுத்தி பரவ தொடங்குகிறது.

தற்போது இது போன்ற ரத்த உறைதலை ஏற்படுத்தும் புற்றுநோய் கட்டிகளை செயல்படாமல் தடுப்பதற்கு Anticoagulants எனப்படும் மருந்துகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இருப்பினும் எம்முடைய உடலில் ஓரிடத்தில் தோன்றிய புற்றுநோய் வேறு இடத்தில் பரவுவதற்கு முன் அதனை குணப்படுத்த இரண்டு வகையான சிகிச்சைகளை பின்பற்றுகிறார்கள்.

இவ்விரண்டு சிகிச்சைகளை பயன்படுத்தும் முன், நோயாளியின் உடலில் எம்மாதிரியான புற்று நோய் ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்தும், அது உடலில் எங்கிருந்து எந்த பகுதிக்கு எவ்வளவு வேகத்தில் பரவுகிறது என்பது குறித்தும், அதற்குரிய பிரத்யேக சிகிச்சை குறித்தும், சிகிச்சையின் பலன்கள் எவ்வளவு சதவீதத்திற்கு கிடைக்கும் என்பது குறித்தும் தொடர்ந்து அவதானித்த பிறகு சிகிச்சையளிக்கிறார்கள்.

அதன்பிறகே இவ்விரண்டு சிகிச்சையில் எதனை வழங்கவேண்டும் என்றும் தீர்மானிக்கிறார்கள். சிகிச்சைக்குப் பின்னர் பல்லியேட்டிவ் கேர் எனப்படும் வலி நிவாரண பராமரிப்பு சிகிச்சை முறை குறித்தும் நோயாளிகளிடம் விவரிக்கிறார்கள்.

டொக்டர் தேவதாஸ்