கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டு கட்டுநாயக்க, வாலனகொட பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றிரவு தப்பிச் சென்றவர் ஆவார்.

தப்பிச் சென்ற குறித்த நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வந்திருந்த நிலையிலேயே அவர் இன்று காலை கட்டுநாயக்கவின் 18 ஆவது மைல் கல் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நோயாளி ஒரு ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் என்றும், சிகிச்சை நடவடிக்கைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன, சிகிச்சையின் பின்னர் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.