Published by T. Saranya on 2021-01-22 10:15:03
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பில் ஆராய்ந்து, செயற்பட்டு விதம் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.நவாஸ் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற பொலிஸ் மாஅதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அல்லது முன்னர் இடம்பெற்ற ஆணைக்குழு விசாரணை குறித்து விசாரணை செய்யவும், விசாரிக்ககவும் மற்றும் அறிக்கை இடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் இந்த மூவரடங்கிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.