கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளமை இன்று பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை 276 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பேலியகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான பெண்ணொருவரும், அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண்ணொருவருமே இவ்வாறு இறுதியாக உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்றையதினம் 875 புதிய கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.