கொவிட்டை கட்டுப்படுத்த இன்னும் 5 வருடங்கள் வரை செல்லும்

Published By: Vishnu

22 Jan, 2021 | 09:42 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட்டை கட்டுப்படுத்த இன்னும் 5 வருடங்கள்வரை செல்லும் என வைரஸ் தொடர்பான விசேட வைத்தியர் நிபுணரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அதனால் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள செலவிடும் தொகையை சுகாதார கல்விக்கு செலவழித்து, நாடுபூராகவும் சுகாதார வழிகாட்டல்களை மக்கள் மத்தியில் நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சோசலிச மக்கள் கட்சி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் வேகமாக பரவிவருகின்றது. ஆனால் வைரஸ் தொடர்பான நிபுணர் என்றவகையில் அரசாங்கம் இதுதொடர்பான எந்த பேச்சுவார்த்தைக்கும் என்னை அழைக்கவில்லை. 

கொத்தணி முறையில் இருந்து சமூகமட்டத்தில் பரவும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. அதனை கட்டுப்படுத்த முறையான சுகாதார பழக்க வழக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும்.

சுகாதாரம் தொடர்பான பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நானும் ஒரு அங்கத்தவராக இருக்கின்றேன். அந்த கூட்டம் இடம்பெற்ற ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை சந்தித்து, வைரஸ் தொற்று சமூக மட்டத்தில் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவித்தேன். 

ஆனால் அவர் அதனை நிராகரித்து, அவ்வாறு எதுவும் இல்லை என்று தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38