மூதூர் பாலத்துக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூதூரிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.