மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் (Serum Institute of India's) ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

வியாழக்கிழமை பிற்பகல் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கட்டுமான கட்டிடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தடுப்பூசி உற்பத்தி பாதிக்கப்படாது என்று குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தீப் பரவலானது தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனினும், நகர மேயர் சம்பவத்தில் ஐவர் உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு  தடுப்பூசி இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.