கம்பாஹா மாவட்டத்தில் இருந்து பதிவான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக கம்பாஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மிகாரா எப்பா தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தின் இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 176 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக கம்பாஹா மாவட்டத்தில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 10,179 ஆக உயர்வடைந்துள்ளதாக டாக்டர் மிகாரா எபா கூறினார்.

இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய கம்பாஹா மாவட்டத்தில் இன்று மாலையுடன் மொத்தமாக 148,109 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.