(இராஜதுரை ஹஷான்)

கேகாலையை சேர்ந்த தம்மிக பண்டார தயாரித்த மருத்துவ பாணம் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் என அரசாங்கம் குறிப்பிடவில்லை பாணத்தை அவர் தனிப்பட்ட முறையிலேயே பகிர்ந்தளிக்கிறார் இதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஆயுர்வேத மருத்துவ முறைமை மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தால் ஜனாசாக்களை அடக்கம் செய்வோம் - சிசிர ஜயகொடி  | Virakesari.lk

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கேகாலையை சேர்ந்த    தம்மதிக பண்டார தயாரித்த மருத்துவ பாணம் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் என்று அரசாங்கம் குறிப்பிடவில்லை.

பாணத்தை பகிர்ந்தளிப்பதற்கு அனுமதியும் வழங்கவில்லை.சாதாரண ஆயுர்வேத மருத்துவ பாணம் என்ற அடிப்படையிலேயே அவர் மக்களுக்கு  பாணத்தை பகிர்ந்தளிக்கிறார்.

ஆயுர்வேத முறைமையில் தயாரித்த அருத்து பாணம் மேற்குலக விஞ்ஞான முறைமையில் முதன்முறையாக பரிசீலனை செய்யப்படுகிறது..எதிர்தரப்பினர் இப்பாணம் குறித்து மாறுப்பட்ட கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.

விஞ்ஞான அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் .ஆகவே தம்மிக பண்டார தயாரித்த பாணம் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் என அரசாங்கம் குறிப்பிடவில்லை.

கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு ஆயுர்வேத முறைமையில் தற்போது சிகிச்சை வழங்கப்படுகிறது. தேசிய வைத்திய முறைமையினை மேம்படுத்த அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் தேசிய மட்டத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைமை கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் என்றால் அதனை அரசாங்கம் கட்டாயம் அங்கிகரிக்கும் என்றார்.