மட்டக்களப்பு ஓட்டுமாவடி பிரதேசத்தில் இருந்து ஆரையம்பதி பாலமுனை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் 10  கிலோ கிராம் கஞ்சா கடத்திய ஒருவரை மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (21) பகல் போக்குவரத்து பொலிசார் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

போக்குவரத்து பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி பிள்ளையாரடி பகுதியில் சம்பவதினமான இன்று போக்குவரத்து பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

இதன்போது முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரிசி மற்றும் பலசரக்கு பொருட்களுடன் பிஸ்கட் பெட்டிகளில் பரிசுப்பொருட்கள் போன்று கஞ்சாவை சூட்சகமாக பொதி செய்யப்பட்ட நிலையில் பொலிசார் கண்டபிடித்தனர்.

இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரiதியை கைது செய்ததுடன் 10 கிலோ கஞ்சாவை மீட்டடுள்ளனர். இது தொடர்பாக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.