Published by T. Saranya on 2021-01-21 16:47:20
(செ.தேன்மொழி)
தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.
இந்நிலையில் , ஐக்கிய தேசிய கட்சியை புதிய உத்வேகத்துடன் மீளக்கட்டியெழுப்பி மாற்றுகட்சியின் இடத்தை நிரப்பிக் கொள்வதற்காக நாம் முயற்சிகளை எடுத்துள்ளோம்.
எமது இந்த செயற்பாடுகளுக்கு அனைவரது ஒத்துழைப்பை வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் , முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிகொத்தாவில் இன்று வியாழக்கிழமை ஐ.தே.க.வின் புதிய நிர்வாகிகள் அனைவரும் தமது பொறுப்புகளை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது, கட்சியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், உபத்தலைவராக முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும், பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவும் , கட்சியின் பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் பதியேற்றுக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்காண்டவாறு தெரிவித்தார்.