நடிகர் சந்தானம் நடிக்கவிருக்கும் 'சபாபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குனர் ஆர் சீனிவாச ராவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் திரைப்படம் 'சபாபதி'. டக்கால்டி, பிஸ்கோத் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சந்தானம் இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார்.

அடுத்த மாத தொடக்கத்தில் இப்படத்தின்  படப்பிடிப்பு நடைபெறும் என்றும், ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் ரமேஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே இயக்குனர் கோகுல் இயக்கத்தில் தயாராகும் 'கொரோனா குமார்' என்ற படத்திலும் சந்தானம் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.