இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பிக்க கருணாரத்ன மற்றும் பிநுர பெர்னாண்டோ ஆகியோருக்கே,  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது.

இவர்கள், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவிருக்கும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும்  இருபத்துக்கு 20 சர்வதேச தொடர்களுக்காக பயிற்சி பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும், இவர்கள் கொழும்பில் மூன்று தனித்தனி குழுக்களில் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

தொற்றுக்குள்ளான இரண்டு வீரர்களும் கொரோனா கிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்பு கொண்ட ஏனைய கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குழுக்களாக பயிற்சி நடத்தப்பட்டதால், அனைத்து வீரர்களும் தொற்றுக்குள்ளான கிரிக்கெட் வீரர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்த  அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.