அரசியல், நிர்வாகக் களங்களில் இராணுவத்தினரை அனுமதிப்பது குறித்து வெளியாகியுள்ள அறிக்கை..!

Published By: J.G.Stephan

21 Jan, 2021 | 01:15 PM
image

(நா.தனுஜா)
ஓய்வுபெற்ற மற்றும் பதவியிலிருக்கும் இராணுவ அதிகாரிகள் நிர்வாகப் பதவிகள், கட்சிப்பதவிகள் மற்றும் முக்கிய அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர். அரசியல் மற்றும் நிர்வாகக் களங்களில் தமது அதிகாரத்தினை வலுப்படுத்துவதற்கு இராணுவத்தினரை அனுமதிப்பது மீளமுடியாத ஒரு நிலையையே ஏற்படுத்தும். 

இதனூடாக ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் ஆகிய அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

இலங்கையில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பில் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கான இலங்கைப் பத்திரிகையாளர்கள் ஆகிய அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கை சிவில் நிர்வாக சேவையின் பெருமளவான முக்கிய பதவிகளுக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவருவதாக  பத்திரிகையாளர்கள்  மற்றும்  சட்டத்தரணிகள் கருத்துவெளியிட்டுள்ளனர். எம்மால் வெளியிடப்பட்ட அட்டவணையில் முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய  ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் முக்கிய அரச பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட 39 இராணுவ அதிகாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இது ஒரு படிப்படியான பொறுப்பெடுத்தலாகும். அதுமாத்திரமன்றி ஜனாதிபதியின் கைகளை அதிகாரமயமாக்கல், உறவினர் ஆதரவுக்கொள்கை, நண்பர்களுக்கு அதிகாரம் வாய்ந்த பதவிகளை வழங்குதல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் உள்ளவர்களை அரசாங்கப்பதவிகளுக்கு நியமித்தல் போன்றனவும் இடம்பெறுகின்றன. இது திருட்டுத்தனமான சதிக்கு ஒப்பானதாகும். இதனூடாக ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38