அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ்ஸுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தில் மீண்டும் சேர அமெரிக்கா எடுத்த முடிவு குறித்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை போதுமான கவனத்துடன் தடுக்கவில்லை என்றும், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்  மீது குற்றஞ்சாட்டி வந்த அமெரிக்கா, அந்த அமைப்பிலிருந்து  வெளியேறும் முறைப்படியான பணியைத் தொடங்கியது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்த அமைப்புக்கு அளித்துவரும் நிதியையும் நிறுத்தினார். இந்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து  முறைப்படி வெளியேறுவதற்கான பணியை அமெரிக்கா தொடங்கியது. அதற்கான கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா அளித்தது.

இந்த கடிதம் அளிக்கப்பட்டு ஓர் ஆண்டில் அதாவது 2021 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி நடைமுறைக்கு வரும். உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து  அமெரிக்கா வெளியேறுவதற்கான அனைத்து நடைமுறைகளும், விதிகளும் சரியாக இருக்கிறதா என்பதை பொதுச்செயலாளர் ஆய்வு செய்வார்” எனத் தெரிவித்திருந்தார்

ஆனால், அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் அறிவிக்கையில்,

“ வரும் நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி  தேர்தலில் தான் வெற்றி பெற்றால், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற அமெரிக்கா அளித்துள்ள கடிதத்தை திரும்பப் பெறுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற சில மணிநேரங்களுக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியா குட்டரெஸ்ஸுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தில் மீண்டும் சேர அமெரிக்கா எடுத்த முடிவு குறித்து தெரிவித்துள்ளார்.

கொடிய கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகப் போராட்டத்திலும், உலக சுகாதார மற்றும் சுகாதார பாதுகாப்புக்கு எண்ணற்ற பிற அச்சுறுத்தல்களிலும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

இதுபோன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் அமெரிக்கா ஒரு முழு பங்கேற்பாளராகவும், இத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், உலக சுகாதார மற்றும் சுகாதார பாதுகாப்பை முன்னேற்றுவதிலும் உலகளாவிய தலைமையை தொடரும் " என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகும் தீர்மானத்திலிருந்து பின்வாங்குதல் தவிர்ந்த, கடந்த ஆண்டு நவம்பரில் ட்ரம்ப் விலகியிருந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் சேர முடிவெடுத்துள்ளார்.

பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, பைடன்  முஸ்லிம் பயணத் தடையை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட  17 முக்கிய பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ளார்.