வெள்ளவத்தை சந்தையில் பணியாற்றிய 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்நிலையில், குறித்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை சுகாதார மருந்துவ அதிகாரி  தெரிவித்துள்ளார். 

மேலும், சில தினங்களாக வெள்ளவத்தைப் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.