அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பராக் ஒபாமா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜோ பைடனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “ எனது நண்பர் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்துக்கள்! இது உங்கள் நேரம்” என தெரிவித்துள்ளார்.