2021 இந்திய பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் இயக்குனராக தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னாள் தலைவவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியின்  பயிற்சியாளராக மஹேல ஜெயவர்த்தன கடமையாற்றுகின்றார். இந்த நிலையில் சங்கக்காரா ராஜஸ்தான் அணியை நிர்வகிக்க உள்ளார்.

ராஜஸ்தான் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய பின்னர்,  சில உரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் தொடர்களில் வழிகாட்டியாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.