தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சி  - திபெத்திய சமூகம் குற்றச்சாட்டு

21 Jan, 2021 | 12:01 PM
image

நாடுகடந்த திபெத்திய அரசாங்கத்தினதும், திபெத்திய பாராளுமன்றத்தினதும் தேர்தலை சீர்குலைப்பதற்கு சீனா முயற்சி செய்வதாக திபெத்திய சமூகத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் மேற்படி தேர்தல்களுக்கான வாக்கெடுப்பு சுமூகமாக நடைபெற்றிருந்தது. 

இந்நிலையில் திபெத்திய சமூகத்தினர் வாக்களிப்பில் ஈடுபட்டபோது வாக்களிப்பு செயன்முறையையும் சில நாடுகளில் வாக்களித்தவர்களின் பெயர்களையும் சீனா அடையாளமிட முயன்றமைக்கான ஆதரங்கள் இருப்பதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

மேலும் பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் உள்ள திபெத்தியர்களும் ஜனவரி மாதம் தமது வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

ஊடக அறிக்கைகளின் பிரகாரம், நேபாளத்தில் தேர்தல் நடத்துவதற்கு மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டது, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையேயான பிளவுகளைத் தீர்க்க சீன உயர் மட்டக் குழு ஒன்று டிசம்பர் 27 அன்று அந்நாட்டிற்கு விஜயம் செய்து திரும்பியது. இந்த விஜயத்தினை மக்கள் அறிந்ததோடு அதிருப்திகளையும் வெளியிட்டிருந்தனர். 

எனினும், பல சீன அதிகாரிகள், நேபாளத்திற்கு விமான மற்றும் நில வழிகள் வழியாக வருகை தந்திருந்ததோடு அவர்கள் தேர்தல்களை கண்காணிப்பதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டிருந்தனர். 

''பல தசாப்தங்களாக திபெத்திய சமூகம் இருப்பதைப் பற்றி சீனா கரிசனை கொண்டுள்ளது'' என்று தி எகனொமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13