சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் 200 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

2009 இல் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 104 பேரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் நீதி விசாரணை நடத்தக்கோரி குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்து நிறுத்திய பொலிஸார் 200 பேரை கைது செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.