முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமைக்காக மேல் மாகாணத்திற்கு வெளியே 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்காக நாடு முழுவதும் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 2,680 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தவிர சுகாதார வழிகாட்டல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை அறிய மேல் மாகாணத்தில் 910 தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றத் தவறியமைக்காக 103 நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவும் உள்ளது.