அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹரிசுக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி பதவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நானும் எனது அரசாங்கமும் ஒரு வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு உறவை நோக்கி ஒன்றிணைந்து செயல்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹரிசுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பலப்படுத்தப்பட்ட இருதரப்பு உறவை நோக்கி நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசு மற்றும் இலங்கை மக்கள் சார்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் பைடன் மற்றும் ஹாரிஸை வாழ்த்தியுள்ளமையும் குறிப்பித்தக்கது.