பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி மேல் மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து அதிபர்கள், சுகாதாரம் மற்றும் கல்வி அதிகாரிகள் இடையேயான கலந்துரையாடல்கள் ஜனவரி 28 அல்லது 29 ஆம் திகதிகளிலோ அல்லது பெப்ரவரி முதலாம் திகதியோ நடைபெறும் என்று அமைச்சகத்தின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

இக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் பின்னர் கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

அத்துடன் பரிந்துரைகளை பெப்பரவரி மூன்றாம் திகதிக்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பப்ப எதிர்பார்த்துள்ளோம்.

மேலும் அவர்களது வழிகாட்டுதலின் அடிப்படையில் மேல் மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட சில பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்.

மேல் மாகாணத்தில் 11 கல்வி வலயப் பகுதிகளுக்குள் 1,576 பாடசாலைகள் உள்ளன, மேலும் 79,000 மாணவர்கள் மார்ச் மாதத்தில் க.பொ.த. சாதாரண நிலை தேர்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

அதன்படி, 907 மேல் மாகாண பாடசாலைகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை முதல் நடைபெறும்.