கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் பிரசவம் சிக்கலுக்குள்ளாவதற்கும், அவர்களின் கரு கலைவதற்கும், அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசு போதிய வளர்ச்சிக்கு முன்னரே பிறப்பதற்கும் இரும்பு சத்து குறைப்பாட்டிற்கும் தொடர்பு உள்ளது.

இன்று உலகம் முழுவதிலும் 30 சதவீத பெண்கள் இரும்பு சத்து குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. இதனிடையே ஒவ்வொரு பெண்ணும் அதாவது 19வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட பெண்ணும் தினசரி 8 கிராம் அளவிற்கு இரும்பு சத்துள்ள பொருட்களை உணவில் சேர்த்துக கொள்ளவேண்டும் என்றும், கருவுற்றிருக்கும் பெண்கள் தினமும் 27 கிராம் அளவிற்கு இரும்பு சத்துள்ள பொருட்களை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

இதனை சாப்பிட மறுத்தாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ அவர்களின் பிரசவம் சிக்கலுக்கு ஆளாகி நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள். பொதுவாக இரும்பு சத்து உடலில் இருந்தால் தான், அவை இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். இரும்பு சத்தின் அளவு குறைந்தால் சோர்வு, போதிய அளவிற்கு சத்தின்மை, சீரற்ற சுவாசம், இதயம் தொடர்பான கோளாறுகள் ஆகியவை ஏற்படக்கூடும். மேலும் இரும்பு சத்து குறைந்திருக்கும் பெண்களில் 10 சதவீதத்தினருக்கு தைரொய்ட் தொடர்பான சிக்கல்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கிறார்கள்.

மாதுளை, பேரீச்சம் பழம், கீரைகள், பாதாம், பயறு, பீட்ஷரூட், எப்பிள், எள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டே வந்தால் உங்களின் இரும்பு சத்து அதிகரிக்கும்.

டொக்டர் பி. புவனேஸ்வரி M.D.,

தகவல் : சென்னை அலுவலகம்