திருகோணமலை - கண்டி வீதியின் மட்டிக்களி பகுதியில் வீதியோர மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபரிகள், இன்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது உடமைகளை நகர சபையினர் கையகப்படுத்தி, அப்பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென தெரிவிப்பதால், தாம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.  

கொரோனா தாக்கம் காரணமாக பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் வீதியோரங்களில் வியாபாரம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், பலர் வீதியோர வியாபார நடவடிக்கைகளை இன்றுவரை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வியாபாரிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் மற்றும் 150 ரூபாய் பணம் நகர சபையால் வசூலிக்கப்பட்டு, அவர்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், திடீரென்று நகர சபையால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நடவடிக்கையின் காரணமாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.