புத்தளம் தில்லையடி ரத்மல்யாய 2 ஆம் குருக்குத் தெருவில் உள்ள கட்டடமொன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புத்தளம், மாவட்டத்திற்கான திடீர் விசாரணை அதிகாரி தெரிவித்தார். 

உயிரிழந்தவர் புத்தளம் தம்பபண்ணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையச் சேர்ந்த மின்ஹாஜ் என்ற  குடும்பஸ்தரே இவ்வாறு தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு உயிரிழந்துள்ளதாக சி சி டி வி காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் போதைக்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம், கல்பிட்டி மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி  தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். 

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.