அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (20.01.2021) அமெரிக்க தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் முன்னிலையில் பதவியேற்றார்.

பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6 ஆம் திகதி  அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளநிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தற்போதைய துணை ஜனாதிபதி மைக்பென்ஸ் கலந்துகொண்டார்.

அவர்களுடன் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளான பராக் ஒபாமா ,பில் கிளிண்டன் மற்றும் ஜோர்ஜ் புஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் இன்று குடி புகுவார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதுதான் அவரது உத்தியோகபூர்வ இல்லம்.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிசின் பதவி ஏற்பு விழா, அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனல்கள் அனைத்திலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இது தவிர ஜே பைடன் குழுவின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ‌யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் பதவியேற்பு விழா நேரலை செய்யப்பட்டுள்ளது.