உயர் நீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் முன்னிலையில்  அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பதவியேற்றார்.

இது ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  இதன் மூலம் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் கறுப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாகிறார்.

மேலும் 49 ஆவது துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் பதவி ஏற்கும்போது இரு பைபிள்கள் மீது உறுதி மொழி எடுத்துள்ளார்.

முதலாவது பைபிள் கமலா ஹரிஸ் ஒரு வளர்ப்பு தாயாகக் கருதிய ஒரு குடும்ப நண்பருக்கு ரெஜினா ஷெல்டனுக்கு சொந்தமானது. இதனை, கமலா ஹரிஸ்  கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் மற்றும் அமெரிக்க செனட்டராக பதவியேற்றபோது இதற்கு முன்பு இந்த பைபிளைப் பயன்படுத்தியுள்ளார்.

இரண்டாவது பைபிள் மறைந்த முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க நீதியான துர்கூட் மார்ஷலுக்கு சொந்தமானது.