இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது.

இன்று புதன்கிழமை ஒரு கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இதனிடையே, நாட்டில் மேலும் 768 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில், இலங்கையில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55,189 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 621  பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை  47,215 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.