(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் புதுக்கடை பகுதியில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

100 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் இந்த நான்கு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் பணியாற்றும் தனியார் பாதுகாப்பு ஊழியரான பெண்ணொருவர், சட்டத்தரணி ஒருவரின் உதவியாளர், துப்புரவு பிரிவின் பெண் ஒருவர், பதிவு செய்தல் பிரிவில் சேவையாற்றும் பெண் ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இந் நிலையில் உயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் மேலும் 250 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க இன்று மாலையாகும் போது தீர்மானிக்கப்ப்ட்டிருந்தது.