(எம்.மனோசித்ரா)

சுகாதார அமைச்சின் 4 பிரிவுகளில் 10 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பதில் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும் சுகாதார அமைச்சில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவது இது முதல் சந்தர்ப்பம் அல்ல என்றும் , இதற்கு முன்னரும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் அதனை முறையாக முகாமைத்துவம் செய்துள்ளதாகவும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரிவுகள் கிருமி நீக்கப்பட்டுள்ளன. அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரிவு மாத்திரம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள போதிலும் , ஏனையவை வழமை போன்று இயங்குகின்றன என்றார்.