வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச்சென்ற சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

நேற்றயதினம் மதியம் வீட்டில் குறித்த பெண் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த திருடன் அவர் அணிந்திருந்த 7 பவுண் மதிப்பான தங்கத் தாலிகொடியை பறித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளான்.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.