அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.

74 வயதான டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன்  ஹெலிகொப்டர் மூலம் அருகிலுள்ள இராணுவத் தளத்திற்குச் சென்று, அங்கிருந்து அவர் புளோரிடாவுக்கு செல்லவுள்ளார்.

46 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன் கிழமை நண்பகல் பதவியேற்கும் நிலையில் அதனை தவிர்த்து வெளியேறியுள்ளார்.

ஜோ பைடன்  பதவியேற்கும்போது ட்ரம்ப் புளோரிடாவில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.