மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் ஒருவருக்கு கொரோனா - காணிப்பதிவகத்திற்கு பூட்டு 

Published By: Digital Desk 4

20 Jan, 2021 | 10:46 PM
image

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக காணிப்பதிவகத்தின் செயற்பாடுகள் இன்று புதன்கிழமை (20) தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

காணிப்பதிவகத்தில் பணிபுரியும் ஊழியர்  ஒருவர் இன்று கடமைக்காக சென்றவேளை வீதி விபத்தில் சிக்கிய நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கு மேற்கொண்ட அன்டிஐன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாவட்ட காணிபதிவகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து உத்தியோகத்தர்களும் சுகாதார திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக தங்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் நோய் தொற்று அறிகுறிகள் ஏற்படுகின்ற போது சுகாதாரதுறையினரை தொடர்பு கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை காணிபதிவகத்தின் சேவைகளை பெறுவதற்கு வருகின்ற பொதுமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை இச்சேவைகளை பெறமுடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் தொரிவித்தார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08