(இராஜதுரை ஹஷான்)

விவசாயத்துறை தொடர்பான தேசிய கொள்கை ஆறு மாத காலத்துக்குள் வெளியிடப்படும். பிரத்தியேக கொள்கை தயாரிப்புக்காக 14 பேரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மஹிந்தானந்த அளுத்கமகே மீது வழக்குத் தாக்கல் | Virakesari.lk

விவசாயத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

விவசாயத்துறை தொடர்பான கொள்கை உள்ளுராட்சிமன்றம், மாகாண சபைகள் என இடத்திற்கு இடம்வேறுப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே விவசாயத்துறை மேம்பாட்டில் பல சிக்கல் நிலை காணப்படுகிறது. ஒரு தரப்பினர் தங்களின் சுய தேவைக்காக விவசாயத்துறை கொள்கையினை தவறான வகையில் செயற்படுத்துகிறார்கள்.

விவசாயத்துறையினை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. விவசாயத்தை துறை தொடர்பில் தேசிய கொள்கையினை வகுக்க 14 துறைசசார் நிபுணர்களை  உள்ளடக்கிய குழு வகடந்த மாதம் நியமிக்கப்பட்டுள்ளது.இக்குழுவினரின் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் இன்னும் ஆறுமாத காலத்துக்குள் விவசாயத்துறை தொடர்பான தேசிய கொள்கை வெளியிடப்படும்.

பெரிய வெங்காயம்,பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தியிகை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.2022ம் ஆண்டளவில்  அத்தியாவசிய உணவு பொருட்கள் பல உள்ளுர் மட்டத்தில் உற்பத்தி செயற்படும் இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி நடுத்தர விவசாயிகளின் வாழ்க்கை தரத்தைமேம்படுத்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த வேளையில் இருந்து பல தீர்மானங்களை எடுத்துள்ளது.வாசனைத்திரவியங்கள் மற்றும் சிறுஏற்றுமதி பயிர்கள் பல மீள்ஏற்றுமதிசெய்யப்பட்டமை தடை செய்யப்பட்டது. இதனால்  நடுத்தர விவசாயிகள் நன்மையடைந்தார்கள்.

விவசாயத்தில் தன்னிறைவடைவதற்கு சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட செயற்திட்டங்கள் முழுமையாக செயற்படுத்தப்படும்.விவசாயத்துறையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை எதிர்தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது கடந்த காலத்தை காட்டிலும் தற்போது விவசாயத்துறை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. என்றார்.