(எம்.மனோசித்ரா)

குற்றவியல் சட்டக் கோவையின் 363 ஆம் உறுப்புரையின் கீழ் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் கடுமையான குற்றச் செயலாக வரையறுக்கப்பட்டுள்ளன. குறித்த குற்றச் செயலின் கீழ் குறித்துரைக்கப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் சட்டக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சட்டரீதியாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைக்கு ஏற்புடைய சட்டத்தில் மாறுபாடுகள் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இலங்கை சட்ட மருத்துவர் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக் கற்கையில் சட்டரீதியாக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு ஏற்புடைய குற்றவியல் சட்டக் கோவையிலுள்ள ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டிய தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.