மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய குருக்களின் வீட்டில் கொள்ளை  - உதவி குருக்கள் கைது 

Published By: Digital Desk 4

20 Jan, 2021 | 10:58 PM
image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து 6 இலச்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபாரணங்களை கொள்ளையிட்ட உதவி குருக்கள் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க ஆபாரணங்களை மீட்டுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தின் குருக்கள் அவரது மனைவி ஆகிய இருவரும் சம்பவதினமான நேற்று முன்தினம் திங்கட்கிழமை (18) காலை 9 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று பகல் 1.30 மணியளவில் வீடு திரும்பியபோது வீட்டின் பின் கதவை உடைத்து அங்கிருந்த அலுமாரியில் இருந்த தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதை கண்டனர்.

இதனையடுத்து இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பெரும் குற்றதர்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொண்ட விசாரணையில் ஆலையத்தின் உதவி குருக்களாக கடமையாற்றி வந்த 29 வயதுடைய கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து கொள்ளையிட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளனர். 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்குப் போர்ச் சூழலால் வலுசக்தி...

2026-03-15 19:54:34
news-image

எரிபொருள் 'கியூ.ஆர்' முறைமை மீண்டும் அறிமுகம்:...

2026-03-15 17:46:05
news-image

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நம்பிக்கையில்லா...

2026-03-15 17:45:11
news-image

ஈரானின் 'குழப்பமான' வெளிவிவகார கொள்கை: ஐக்கிய...

2026-03-15 17:37:26
news-image

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம்...

2026-03-15 17:29:30
news-image

இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் தாமதமாகவே செய்து...

2026-03-15 17:28:58
news-image

சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன்னர்...

2026-03-15 17:27:41
news-image

மத்திய கிழக்கின் போர்ச் சூழலுக்கு மத்தியில்...

2026-03-15 17:23:14
news-image

புதிய வாகனங்களுக்கான கியூ.ஆர் குறியீட்டுப் பதிவு...

2026-03-15 16:17:59
news-image

மலையக பெருந்தோட்ட பகுதியில் புதிய வாக்காளரை...

2026-03-15 16:00:41
news-image

சுகாதார அமைச்சர் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு...

2026-03-15 15:37:09
news-image

காரில் கடத்தப்பட்ட மான் மற்றும் குளுமாட்டு...

2026-03-15 15:31:52