ராஜபக்ஷ குடும்பம் அதிகாரத்தைத் துறக்க தயாரில்லை: சம்பிக ரணவக

Published By: J.G.Stephan

20 Jan, 2021 | 05:57 PM
image

(நா.தனுஜா)
நாட்டில் கடந்த 70 வருடகாலத்தில் இடம்பெற்ற அனைத்து நன்மை, தீமைகளுக்கும் சேனாநாயக்க - கொத்தலாவல பரம்பரை, பண்டாரநாயக்க - ரத்வத்தே பரம்பரை, ஜயவர்தன - விக்கிரமசிங்க பரம்பரை மற்றும் 2005 ஆம் ஆண்டின் பின்னர் ராஜபக்ஷ பரம்பரை ஆகிய நான்குமே பொறுப்பேற்க வேண்டும். அவற்றில் ராஜபக்ஷ குடும்பம் அதிகாரத்தைத் துறப்பதற்குத் தயார் நிலையில் இல்லை என்பதுடன் சமுதாயத்தின் அனைத்துக் கட்டமைப்புக்களையும் ஆள்வதற்கு முற்படுகின்றது என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எமது எதிர்கால சந்ததியினர் மத்தியில் பாரிய சமுதாய மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு நாம் முன்னின்று செயற்பட வேண்டும். தற்போது நாட்டை ஆட்சிசெய்கின்ற, எதிர்காலத்தில் ஆட்சிசெய்வதற்கு எதிர்பார்த்திருக்கும் குடும்பத்திற்கு அந்த இயலுமை இல்லை என்பது அவர்களது கடந்தகால செயற்பாடுகளின் மூலம் உறுதியாகியிருக்கிறது. 

தற்போது நாடு முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைக்கு கடந்த 70 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தவர்களே பொறுப்புக்கூற வேண்டும் என பரவலாகக் கூறப்படுகின்றது. எமது நாடு இலவசக்கல்வி, இலவச சுகாதாரசேவை ஆகியவற்றில் சிறந்த இடத்தில் இருந்தாலும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அது சிறந்த இடத்தை அடையவில்லை என்றார். 

இந்நிலையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இரத்தம் தோயாத சமுதாயமொன்றை கையளிக்கும் பொறுப்பு எமக்கு உள்ளது. இதனை  உருவாக்குவதற்கு எவ்வித இன, மத, அரசியல், கட்சிபேதங்களுமின்றி திறமையுடைய அனைவருக்கும் அழைப்புவிடுக்க வேண்டும் என  குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய மீனவர்களில் இருவருக்கு 6 மாத...

2025-03-19 15:48:10
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56
news-image

யானைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட நபரை மீட்ட வன...

2025-03-19 15:38:12
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர் சங்க...

2025-03-19 15:45:12
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32