(எம்.எப்.எம்.பஸீர்)

ஏப்ரல் 21 தாக்குதல் என அறியப்படும் 2019 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்குவைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு தனது சாட்சி விசாரணைகளை நிறைவு செய்துள்ளது.

அதன்படி ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும்,  மிக முக்கியமான சாட்சியமாக கருதப்படும், குறித்த தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்த சி.ஐ.டி.யின் அப்போதைய பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சாட்சியம் இதுவரை பதிவு செய்யப்படாத நிலையில்,  அடுத்த வாரத்துக்குள் அவரது சாட்சியத்தை பதிவு செய்வது குறித்து அவதானம் செலுத்தியுள்ளதாக ஆணைக் குழுவின் செயலர் எச்.எம்.பி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.