(நா.தனுஜா)
இலங்கையைப் பொறுத்தவரையில் தொல்பொருள் என்பது பௌத்தத்திற்குரியது என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு, அது தமிழ் இன அழிப்பிற்கான ஒரு கருவியாகத் தொல்பொருள் திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டு வருவது குருந்தூர்மலை விவகாரத்தின் ஊடாக மீண்டும் நிரூபனமாகியிருக்கிறது.
என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
குருந்தூர்மலை தொடர்பில் 1933 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிலேயே அது ஒரு தமிழ்ப்பெயராகவே பதிவுசெய்யப்பட்டிருந்தது. சிங்களம் அல்லது பௌத்தம் தொடர்பில் அதில் எந்தவொரு கருத்துக்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை. அங்கு தமிழ்மக்கள் தமது மரபுகள் மற்றும் நம்பிக்கைகளின்படி வழிபாடுகளில் ஈடுபட்டுவந்தார்கள் என்பது தான் சரித்திரம்.
அவ்வாறிருக்கையில் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் எவ்வித சட்டரீதியான ஆவணங்களுமின்றி சில பௌத்த பிக்குகள் புத்தர்சிலையுடன் குருந்தூர்மலைக்குச் சென்று, அங்கு விகாரையொன்றை அமைப்பதற்கு முற்பட்ட சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து இச்சம்பவம் சமாதானத்தைக் குழப்பும் வகையிலான ஒரு நடவடிக்கை என்று குறிப்பிட்டு, அங்கு பொதுமக்கள் வழிபாடு மேற்கொள்வதைத் தடுக்கும் விதமாக பொலிஸாரால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து குருந்தூர்மலைப்பகுதியில் பௌத்தத்துடன் தொடர்புடைய எவ்வித அடையாளங்களும் தகவல்களும் இல்லையென்றும், அங்கு தமிழ்மக்களே காலங்காலமாக வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர் என்பதற்கான சான்றுகளே காணப்படுகின்றன என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தகைய பின்னணியிலேயே மீண்டும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையில் அங்கு தொல்பொருள் அகழ்வாராய்வுப்பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.
எமது நாட்டைப் பொறுத்தவரையில், தொல்பொருள் என்று குறிப்பிடும்போதே அது பௌத்தத்திற்குரியது என்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டு தமிழ்மக்களின் இன அழிப்பிற்கான ஒரு கருவியாக தொல்பொருள் திணைக்களத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது இச்சம்பவத்தின் ஊடாக மீண்டுமொரு தடவை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதுவிடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றோம் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM