(செ.தேன்மொழி)

மன்னார், ஹோமாகம மற்றும் கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை வில்லைகளுடன் இளைஞர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

மன்னார்

மன்னார் - பேசாலை பகுதியில் கஞ்சாப் போதைப் பொருளை கடத்திச் சென்ற 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வேனிலிருந்து 20 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஹோமாகம
ஹோமாகம - பிட்டிபன பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது , ஒரு கிலோ 650 கிராம் கஞ்சாவுடன் 26 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ
கல்கிஸ்ஸ பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைவில்லைகளுடன் மேலும் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 செயற்கை போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.