முதலாவது இத்தோசுரியு கராத்தே தோ  இணையம் மூலமான சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட இத்தோசுக்காய் சுவிட்சர்லாந்து கிளையின் மாணவர்கள் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்தனர்.

16 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சுவிட்சர்லாந்து இத்தோசுக்காய் கிளை மாணவருக்கான பயிற்சிகளை பிரதம பயிற்றுநர் சென்செய்.வி.கெளரிதாசன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.