பிறந்து 10 நாட்களேயான ஆண் குழந்தையொன்று யாழ். இளவாளை - வடலியடப்பு பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை அந்தக் குழந்தை பெட்டி ஒன்றில் இடப்பட்டு, வடலியடப்பு பகுதி கோயிலுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில், பொது மக்கள் குழந்தையை மீட்டு, இளவாழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அந்த குழந்தை தௌ்ளிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளது.

மேலும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இளவாளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.