(செ.தேன்மொழி)

சிறுவர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியான பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்ட கிரியெல்ல பிரதேச செயலகத்தின் செயலாளர் இரண்டு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கிரியெல்ல பிரதேச செயலகத்தின் செயலாளர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, கிரியெல்ல பிரிவுக்கான சிறுவர் பாதுகாப்பு பெண் அதிகாரியொருவர் கடந்த 15 ஆம் திகதி கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுளித்துள்ளார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பிரதேசத்திற்கு பொறுப்பான சிறுவர் மற்றும் மகளிர் விவகார அதிகாரிசபையினாலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 

பின்னர் பிரதேச செயலகத்தின் செயலாளர் கைது செய்யப்பட்டதுடன், அவர் நேற்று இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். நீதிவான் சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்துள்ளதுடன், எதிர்வரும் மோ மாதம் 11 ஆம் திகதி அவரை மன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.