ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சி முயற்சிக்க வேண்டும்: டிலான் பெரேரா

By J.G.Stephan

20 Jan, 2021 | 12:19 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும். அதனை பெற்றுக்கொள்ளவே எதிர்க்கட்சி முயற்சிக்கவேண்டும். ஆனால் ரஞ்சனுக்காக செயற்படுவதாக தெரிவித்துக்கொண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடுவதை தடுப்பதற்கே முயற்சிக்கின்றனர் என ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ரஞ்சனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான தீர்ப்பு, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்பாகும். தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தொடர்பில் ரஞ்சன் உட்பட எதிர்க்கட்சியினருக்கு  நல்ல அபிப்ராயம் இருக்கின்றது. அதனால் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கியதாக தெரிவிக்க முடியாது. 

அத்துடன் ரஞ்சனுக்கு தற்போது உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்து சிறைத்தண்டனை வழங்கி இருக்கின்றது. நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்துக்கு பின்னரே வெளியில் வரமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால் இருக்கும் ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பை பெற்றுக்கொள்வதாகும். அதனால் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவரவேண்டும் என தெரிவிக்கும் எதிர்க்கட்சியினர், உண்மையாகவே அவருக்காக செயற்படுவதாக இருந்தால், அவருக்கு பொது மன்னிப்பை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவேண்டும் என்றார்.

மேலும் விடுதலையாவதற்கு ஒரேவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும் என்பதை ரஞ்சன் விளங்கிக்கொண்டிருக்கின்றார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37
news-image

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளின்...

2022-10-03 15:27:04
news-image

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்...

2022-10-03 16:13:31
news-image

மலையக மக்களுக்கு வீட்டு உரிமை வழங்கக்...

2022-10-03 15:09:35